யுனானி

யுனானி பற்றிய விளக்கம்
தத்துவத்தில் இருந்து மருத்துவத்தை பிரித்த முதல் நபர் ஹிப்போகிரேட்டசு ஆவார். பாவத்திற்கான தண்டனையே நோய் என்று நிலவி வந்த கருத்தை உண்மையில்லை என்று நிரூபித்துக்காட்டிய முதல் நபரும் அவரே. காயங்கள் மற்றும் நோய்களை குணப்படுத்துவதற்கான பெரும்பாலான பாரம்பரிய சிகிச்சைகள் நாட்டு மருத்துவத்தில் இருந்து பிறந்தவையே ஆகும். இந்த நடைமுறை வழக்கம் பல் வலி முதல் மலட்டுத்தன்மை வரை சகலவிதமான பிணிகளை குணப்படுத்துவதற்கும் மூலிகைகள் மற்றும் நன்மைபயக்கக்கூடிய மருந்துகள் பற்றி காலங்காலமாக சிறுகச்சிறுக சேகரித்துப் பெற்ற அறிவைப் பயன்படுத்தி செய்யப்படுவதாகும்.
நவீன மருத்துவத்தின் தந்தை....

யுனானி الطب اليوناني மருத்துவ முறைமை கிரீஸை பிறப்பிடமாகக் கொண்டது மற்றும் 'யுனானி' என்ற பதம் 'யுனான்' என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். அரபி, ஹிந்துஸ்தானி, பாரசீகம், பாஷ்டோ மற்றும் உருது ஆகிய மொழிகளில் 'யுனான்' என்பதற்கு கிரீஸை குறிக்கிற 'கிரேக்கம்' என்று அர்த்தமாகும்.

யுனானி மருத்துவத்தின் கோட்பாட்டியல் கட்டமைப்பு என்பது ஹிப்போகிரேட்டசு (460-377 கி.மு) மேற்கொண்ட கவனமான ஆய்வுகள் முறை மற்றும் அறிகுறிகளின் ஒப்பீடுகள் உள்ளிட்ட ஆய்வுப்பணியின் அடிப்படையிலானது ஆகும். அவர்தான் உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஓய்வு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ மருந்துகளுக்கான அடித்தளத்தை முதன்முதலாக அமைத்து தந்தார். ஒரு நோயை எதிர்த்துப் போராடுவதில் உடலின் இயற்கையான சக்திகளுக்கு உதவுவதே ஒரு மருத்துவரின் தலையாயப் பணி என அவர் வாதிட்டார்.

யுனானி முறைமையானது, உடலில் நான்கு தாதுக்கள் (தோஷங்கள்) உள்ளன என முன்வைக்கிற தாது (தோஷம்) இயல் கோட்பாட்டை பின்பற்றுகிறது: -

தாம் [இரத்தம்]   பல்ஹம் [சளிசஃப்ரா [மஞ்சள் பித்தம்சவுடா [கரும்பித்தம்

இது, ஆயுர்வேதத்தில் கபம், வாதம், பித்தம்
எனச் சொல்லப்படுகிற மூன்று தோஷங்களுக்கு இணையானது.

ஹிப்போகிரேட்டசுக்குப் பிறகு வந்த கேலன் (131-200 கி.பி) உள்ளிட்ட ஏராளமான கிரேக்க அறிஞர்களும், அதனைத் தொடர்ந்து ராசேஸ் (850-932 கி.பி) மற்றும் அவிசென்னா (980-1037 கி.பி) போன்ற அரபு மருத்துவர்களும் இந்த முறைமையை கணிசமான அளவு மேம்படுத்தினர்.

ராசேஸ் மற்றும் அவிசென்னா ஆகியோர் தாங்கள் கண்டறிந்தவற்றை தொகுத்து முறையே 'அல்-ஹவி' (Al-Hawi), 'அல்-கனுன்' (Al-Qanun) ஆகிய புத்தகங்களை எழுதினர். இவை பின்னர் லத்தின் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இடைக்கால ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்பட்டன. இவை, மேற்கத்திய மருத்துவச் சிந்தனைகள் மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் யுனானி மருத்துவத்தின் வளர்ச்சி
 யுனானி தான் உருவான மூல நாட்டில் இருந்து மறைந்திருந்தாலும் இந்தியாவில் தனது வேர்களை ஆழமாக ஊன்றியிருந்தது. முகலாயர்களுக்கு வெகு முன்னதாகவே இந்தியாவிற்குள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடாக நுழைந்த அரபு வணிகர்கள் இங்கே யுனானியை அறிமுகப்படுத்தி இருந்தனர். யுனானி அறிஞர்களுக்கு கில்ஜி, துக்ளக் மற்றும் முகலாயப் பேரரசர்கள் அரசு ஆதரவு வழங்கியதோடு சில அரசர்கள் அவர்களை தமது அரசவை மருத்துவர்களாகவும் நியமித்தனர். அபு பக்கர் பின் அலி உஸ்மான் சஹானி, சத்ருத்தின் தமஷ்கி, அலி கீலானி, அக்பல் அர்சானி மற்றும் முகமது ஹஷிம் அல்வி கான் போன்ற அறிஞர்களின் பங்களிப்பு காரணமாக, 13 மற்றும் 17ம் நூற்றாண்டுகளுக்கு இடையே, யுனானி தனது மலர்ச்சிக்காலத்தில் செழித்தோங்கியது எனக் கூறலாம். அவர்கள் இந்திய மருந்துகளை பல்வேறு மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தியதோடு, ஏராளமான நாட்டு மருந்துகளை தங்கள் சொந்த முறைமையுடன் சேர்த்து, அதன் வளங்களை மேம்படுத்தினர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தைத் தவிர வேறு மருத்துவ முறைமைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் யுனானி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலும் இந்தியாவில் அஜ்மல் கான் போன்ற ஹக்கிம் குடும்பத்தினரால் யுனானி முறைமை அழியாமல் தப்பிப் பிழைத்தது.

மேலும் அதிக கல்வி நிறுவனங்கள் திறப்பு, யுனானி மருத்துவத்தில் மத்திய ஆராய்ச்சி மன்றம் [CCRUM], இந்திய மருத்துவ மத்திய மன்றம் [CCIM], யுனானி மருத்துவ தேசிய நிறுவனம் [NIUM] போன்றவை நிறுவப்பட்டதன் மூலமாக யுனானி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்தது.

யுனானி மருந்துகள் எவ்வாறு செயலாற்றுகிறது
 யுனானி கருத்துப்படி, உடலின் அத்தியாவசியமான ஆக்கக்கூறுகள் மற்றும் செயலாற்றும் கோட்பாடுகளை ஏழு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:-
பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் கட்டமைக்கிற தொகுதிகளாகவும் பருப்பொருட்களின் வெவ்வேறு நிலைகளாகவும் உள்ள நிலம், நீர், காற்று, மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அர்கன் (Arkan) அல்லது மூலகங்கள்; (Mizaj) மிசாஜ் (இயற்கையாக அமைந்துள்ள மனநிலைகள்); (Akhlat) அஹ்லத் (தோஷங்கள்); (Aza) அசா (உறுப்புகள்); (Arwah) அர்வாஹ் (உயிர், ஆன்மா அல்லது இன்றியமையாத மூச்சு); (Quva) குவா (ஆற்றல்); மற்றும் (Af'al) அஃப்'அல் (செயல்).

நான்கு மூலகங்களில் ஒவ்வொன்றும் தனக்கே உரிய சிறப்புக் குணங்களை கொண்டுள்ளன: நிலமானது குளிராகவும் உலர்வாகவும்; நீரானது குளிராகவும் ஈரமாகவும்; நெருப்பானது சூடாகவும் உலர்வாகவும்; காற்றானது சூடாகவும் ஈரமாகவும் உள்ளது. சமச்சீரான உடலின் விளைவான தரமானது அதன் மிசாஜ் என அழைக்கப்படுகிறது.
ஒரு பொருளின் இயற்கையாக அமைந்துள்ள மனநிலைகள் (mizaj-e-mutadil) மிசாஜ்--முடாடில் (சமச்சீரான ஒன்று) அல்லது (mizaj-e-ghair-mutadil) மிசாஜ்--கெய்ர்-முடாடில் (சமச்சீரற்ற ஒன்று) என ஏதாவது ஒன்றாக இருக்கலாம். சமச்சீரற்ற இயற்கையாக அமைந்துள்ள மனநிலைகளின் வெவ்வேறு வகைகள் மற்றும் சாயல்கள் பற்றி யுனானியில் விவரிக்கப்பட்டுள்ளன, இது, ஒரு தனிநபரின் இயற்கையாக அமைந்துள்ள மனநிலைகளை தீர்மானிக்கிற ஒரு தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான தோஷ அமைப்பானது பிறப்பிலேயே ஒவ்வொரு நபருக்கும் உரிமையாக வழங்கப்பட்டுள்ளது என நம்புகிறது.

ஒரு தனிநபரின் அமைப்பு அல்லது நிலையால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வரையறைக்குள் ஏற்படும் எந்தவொரு இடையூறுகளையும் மீlட்டெடுக்க முயற்சிக்கிற ஒரு சுய-பாதுகாப்பு சக்தியை உடலானது கொண்டுள்ளது எனவும் யுனானி முன்வைக்கிறது. மருத்துவர், இந்த சக்தியின் செயல்களுக்கு உதவி செய்து மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார், மாறாக இந்த சக்தியை ஒதுக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்கவோ அல்லது அந்த சக்திக்கு முட்டுக்கட்டையிட்டு தாமதப்படுத்தவோ செய்வதில்லை.

"ஒரு யுனானி மருத்துவர், சிகிச்சையின் ஆரம்பத்திலேயே வீரியமிக்க மருந்தை பரிந்துரைப்பதில்லை. வழக்கமான ஆரோக்கியமான நிலைமையில் இருந்து மாறுபாடு அடைந்துள்ள அளவுக்கு ஏற்ப அவர் மருந்தை தேர்ந்தெடுத்து, அந்த சிகிச்சையால் ஏற்படுத்தப்படுகிற விளைவை கூர்மையாக கவனிக்கிறார். அதே நேரத்தில், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைப்பாணியில் நோயாளி சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.
இத்தகைய லேசான மருந்துகளின் நோய் தீர்க்கும் விளைவு ஒரு தவறான உணவுக் கட்டுப்பாடு அல்லது வாழ்க்கைப்பாணியால் ஓரளவுக்கு எதிரீடுசெய்யப்படலாம். ஒரு 'சூடான', 'குளிர்மையான', 'உலர்வான' அல்லது 'ஈரமான' நோய்க்கு எதிர்மறை பண்புள்ள உணவு அல்லது மருந்து கொண்டு சிகிச்சையளிக்கும் வேளையில் குறிப்பிட்ட அக்கறை உடன் கூடிய பராமரிப்பு எடுக்கப்படவேண்டும்.
யுனானியில், உடல்நலம் மற்றும் நோய் ஆகியவை நான்கு தோஷங்களுக்கு இடையேயான சமநிலை அல்லது சமநிலையின்மைப் பொறுத்து அமைவதால், அந்த நேரத்தில் எந்த தோஷம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தீர்மானிக்க, நாடித்துடிப்பு பற்றிய ஒரு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த முக்கியமான படிநிலை என்பது சிறுநீர்ப் பரிசோதனை ஆகும். இதன் நிறம், சுவை, பிசுபிசுப்புத்தன்மை ஆகியவையும், தமது மேற்பரப்பில் இது நுரை கொண்டுள்ளதா எனவும் ஆராயப்படுகிறது. நீர்க்குமிழிகள் பெரிய அளவில் உருவாகிறது எனில் இது பல்ஹம் [சளி] அதிகமாக உள்ளது எனவும், அல்லது துர்நாற்றமடிப்பதாக இருக்கிறது எனில் சஃப்ரா [மஞ்சள் பித்தம்] அதிகமாக உள்ளது எனவும் குறிக்கிறது. இதே போல மலமும் ஆய்வுசெய்யப்படுகிறது. சில யுனானி மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தை ஆய்வு செய்வதோடு, சுவாசித்தல் மற்றும் இதயத்துடிப்பு ஒலிகளை ஆய்வு செய்வதற்கு ஸ்டெதோஸ்கோப்களையும் பயன்படுத்துகின்றனர்.

நவீன ஆராய்ச்சி
 ஆர்த்ரிட்டிஸ், ஆஸ்துமா, மனநோய், இதய மற்றும் செரிமானக் கோளாறுகள், சிறுநீர் கழிக்கும் வழி நோய்த்தொற்றுகள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் யுனானி மருத்துவம் தன்னிகரற்று விளங்குகிறது. மேலும் யுனானி மருந்துகள் மலேரியா, ஹெபடைடிஸ் B, வெண்தோல் மற்றும் தோல் பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் மிக அதிகளவில் பலனளிப்புத்திறனுடன் சிறந்து விளங்குவதாக அண்மைய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
யுனானி, எய்ட்ஸ் நோயாளிகளிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளவுகளை அதிகரிப்பதிலும் பலனளிப்புத்திறனுடன் விளங்குவதாக சொல்லப்படுகிறது. ஜையாபெட்டுஸ் (Ziabetus) அல்லது (diabetes) டையாபெட்டிஸ் (சர்க்கரை நோய்) தனது ஆரம்ப நிலைகளில் யுனானியைப் பயன்படுத்தி முழுமையாக குணப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதன் செயல்திறன், பாலியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் வேறு எந்த மருத்துவ முறைகளுடனும் ஒப்பிட முடியாதபடி மிகவும் உயர்ந்த பலனளிப்புத்திறனுடன் விளங்குகிறது.

யுனானி மருந்துகள் அனைத்து பாலியல் நோய்களையும், இன்னும் சொல்லப்போனால் பெண்களிடத்தில் உள்ள மலட்டுத்தன்மையும் கூட நிரந்தரமாகவும் திறம்படவும் குணப்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கக்கூடிய பக்க விளைவுகளைக் கொண்டுள்ள வயாக்ரா மற்றும் இதனை ஒட்டிய இந்திய மருந்து வகைகளைப் போன்ற நவீன மருந்துகளைப் போல அல்லாமல், யுனானி மருந்துகள் ஒரு நபரின் பொது உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
இன்று, யுனானி பயிற்றுவிக்கும் 40 இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு கல்லூரிகள் இந்தியாவில் உள்ளன. இவை BUMS (Bachelor of Unani Medicines and Surgery) பட்டம் வழங்குகின்றன. பல்வேறு கல்லூரிகள் அண்மையில் யுனானியில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி, Ilmul Advia (மருந்தியல்), Moalijat (மருந்து), Kulliyat (அடிப்படை கோட்பாடுகள்), Jarahat (அறுவை சிகிச்சை), Amraz-e-Niswan (மகளிர் நோய் மருத்துவ இயல்), மற்றும் Amraz-e-Atfal (குழந்தை மருத்துவம்) ஆகிய துறைகளில் MD பட்டங்களை வழங்குகின்றன. அலிகாரில் உள்ள அஜ்மல் கான் டிப்பியா கல்லூரியில் அறுவைச் சிகிச்சைத் துறையிலும், ஹைதராபாத்தில் உள்ள அரசு நிஜாமியா டிப்பி கல்லூரியில் மருந்து, மகளிர் நோய் மருத்துவ இயல் மற்றும் குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளிலும் முதுகலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. ஹம்தர்த் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப்புலம் (யுனானி), டெல்லி கரோல் பாக்கில் உள்ள ஆயுர்வேதம் மற்றும் யுனானி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இதர கல்லூரிகளும் இத்தகைய முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

இந்தியாவின் 18 மாநிலங்கள் எங்கும் 150க்கும் அதிகமான யுனானி மருத்துவமனைகள் மற்றும் 1,500க்கும் அதிகமான யுனானி மருத்துவ மையங்கள் உள்ளன. நம் நாட்டில் ஏறத்தாழ 50,000 யுனானி மருத்துவர்கள் உள்ளனர் மற்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய மருத்துவச் சேவை அளித்தல் முறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இப்போது யுனானி விளங்குகிறது, மற்றும் WHO-ஆல் மாற்று மருத்துவ முறைமைகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யுனானி மருத்துவம் என்பது பலனளிப்புத்திறன் மிக்கதும் எளிதில் கிடைக்கக்கூடியதுமாகும்.

மாற்று மருத்துவ மற்றும் இயற்கையான மருத்துவ முறைமைகளில் உலகளாவிய அளவில் ஆர்வம் பெருகிவரும் போக்கைத் தொடர்ந்து, யுனானியும் ஆஃப்கானிஸ்தான், சீனா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, ஃபின்லாந்து, நெதர்லாந்து, நார்வே, போலந்து, கொரியா, ஜப்பான், சவுதி அரேபியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, UK மற்றும் USA உள்ளிட்ட 20க்கும் அதிகமான நாடுகளில் தனது உள்ளூர் பெயர்களில் கவனத்தை ஈர்த்து வருவதோடு, கைக்கொள்ளப்பட்டும், பயிற்றுவிக்கப்பட்டும் ஆராய்ச்சி செய்யப்பட்டும் வருகிறது.

சில தவறான புரிந்துக்கொள்ளல்கள்

இந்தியாவில் உள்ள யுனானி மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்ற தவறான புரிந்துக்கொள்ளல் நிலவுகிறது. இதர சமூகங்களில் இருந்து பல யுனானி மருத்துவர்கள் இத்தொழிலில் இருந்தாலும் கூட, பெரும்பாலான மக்கள் யுனானி என்பது ஒரு இஸ்லாமிய மருத்துவ முறைமை மாத்திரமே என நினைக்கின்றனர்.

யுனானி என்பது ஒரு நன்கு வளர்ந்த மருத்துவ அறிவியல் ஆகும். இதற்கும் இஸ்லாம் அல்லது இஸ்லாமியப் பண்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தென் இந்தியாவில் உள்ள யுனானி மருத்துவக் கல்லூரிகளில் இதர சமூகங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் முதுகலைப் பட்டப்படிப்புகளையும் பயின்றுவருகின்றனர்.

யுனானி என்பது பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், கற்றவர்கள் மற்றும் கல்வியறிவு அற்றவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருந்துகள் விலையுயர்ந்ததாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் இது ஏனெனில் மூலிகை மருந்துகள் மற்றும் இதர இயற்கையான சேர்க்கப்படும் பொருட்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டி உள்ளதாலும், இவை விலை உயர்ந்ததாகவும் கிடைப்பதற்கு அரிதானதாகவும் இருப்பதாலேயே ஆகும். இத்தகைய மருந்துகள் முழுவதும் பக்க விளைவுகள் எதுவுமில்லாமல் இருப்பதால், புதிய தலைமுறை இளவயதினர்கள் கூட இதனைப் பயன்படுத்த மிகவும் விரும்புகின்றனர். உண்மையில், நவீன மனிதனின் பழக்கங்கள் மற்றும் இயற்கையாக அமைந்துள்ள மனநிலைகளுக்கு உண்மையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொருந்தக்கூடியதாக இருக்கும்.

மூலிகையிலான மற்றும் இயற்கையான மருத்துவ முறைமைகளைப் பயன்படுத்துவதில் மக்களிடையே புதிதாக காணப்படும் மோகம் காரணமாக யுனானி மருத்துவமானது மிகப்பெரிய அளவில் எழுச்சி கண்டு செழித்தோங்கி வருகிறது.


Labels: