பண்டையச் சித்தர்கள்
தங்களது ஆய்வின்
மூலமாக நோயினைத்
தீர்க்க எளிய
முறையை உருவாக்கித்
தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய
மரபு முறைப்படி
பரவி வந்துள்ளது.
அதில் வீட்டில்
தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம்
எளிதாக செய்யும்
சில மருத்துவ
முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர் அவை ..
ஐந்தாறு துளசி
இலைகளோடு ஒரு
சிறு துண்டு
சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு
அரைத்து நெற்றியில்
பற்றாகப் போட்டால்
தலைவலி குணமாகும்.
சுக்கு, பால்
மிளகு, திப்பிலி,
ஏலரிசி ஆகியவற்றை
நன்கு வறுத்துப்
பொடி செய்து
தேனில் கலந்து
சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய்
எண்ணையில் கற்பூரம்
சேர்த்து நன்கு
சுடவைத்து ஆற
வைத்து நெஞ்சில்
தடவினால் சளி
குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து,
தேன் சேர்த்துச்
சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில்
படிகாரம் போட்டுக்
காய்ச்சி ஆறவைத்து,
அதனை ஒரு
நாளைக்கு மூன்று
வேளை வாய்
கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
ஒரு டம்ளர்
தண்ணீரில் கருவேப்பிலை,
இஞ்சி, சீரகம்
ஆகிய மூன்றையும்
கொதிக்க வைத்து
ஆறவைத்து வடிகட்டி
குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில்
இட்டு, சாம்பல்
ஆகும் வரை
எரிக்க வேண்டும்.
மஞ்சள் கரி
சாம்பலை தேன்
கலந்து சாப்பிட்டால்
குடல் புண்
ஆறும். பூவை
உலர்த்தி தூளாக
வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன்
ஆறாத வயிற்றுப்புண்ணும்
நீங்கும். வெந்தயத்தை
நெய்யில் வறுத்து
பொடி செய்து
மோரில் குடித்தால்
வயிற்று வலி
நீங்கும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை
சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி
இலைசாறை ஆலிவ்
எண்ணையில் காய்ச்சி
பூசி வந்தால்
பித்த வெடிப்பு
குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம்
இவைகளை சம
அளவு எடுத்து
சேர்த்து வடித்த
கஞ்சியில் கலக்கி
மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு
உள்ள இடத்தில்
மூன்று வேளை
தடவினால் குணமாகும்.
வெள்ளை பூண்டை
வெற்றிலை சேர்த்து
மசிய அரைத்து
தினமும் தோலில்
தேய்த்து குளித்து
வந்தால் தேமல்
குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி
துவரம் பருப்புடன்
சேர்த்து, சாம்பாராக
செய்து சாப்பிட்டு
வந்தால் மூலம்
குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல்
நீக்கி அரை
லிட்டர் நீரில்
போட்டு சுண்டக்
காய்ச்சி, பால்,
சர்க்கரை சேர்த்துக்
காலை, மாலை
சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து
குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.